இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
தாக்குதல் நடந்த சமயம் நகரின் மையப் பகுதியில் உள்ள யூத வழிபாட்டுத்தலம் (synagogue) மூடப்பட்டிருந்ததாக வீயன்னாவில் வசிக்கும் இஸ்ரேலிய சமூகத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.
“நெருக்கடியான இந்தத் தருணத்தில் பாரிஸ் மக்கள் வீயன்னாவின் பக்கம் நிற்கின்றனர் ” என்று பாரிஸ் நகர மேயர் ஆன் கிடல்கோ தனது ருவீற்றரில் பதிவிட்டுள்ளார்.
“பிரெஞ்சு மக்கள் தங்களது நட்பு நாடான ஒஸ்ரிய மக்களோடு அதிர்ச்சியையும் துயரத்தையும் பகிர்ந்து கொள்கின்றனர்” என்று அதிபர் மக்ரோன் தனது ருவீற்றர் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.
” பிரான்ஸை தொடர்ந்து ஒரு நட்பு நாடு தாக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஐரோப்பியர்கள். யாருடன் மோதுகிறோம் என்பதை எதிரிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
நாங்கள் எதனையும் விட்டுவிடப் போவதில்லை “-என்றும் மக்ரோன் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
வீயன்னா நிலைவரத்தை எலிஸே மாளிகை மிக உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்று இங்கே பாரிஸில் செய்தி வெளியாகி இருக்கிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!