news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஓடும் பஸ்ஸில் யுவதியிடம் சில்மிஷம் செய்த பொலிஸ் பொறுப்பதிகாரி அளுத்கமவில் கைது!

28 Feb, 2023
பஸ்ஸில்  பயணித்த யுவதி ஒருவருடன் சில்மிஷம் செய்த  குற்றச்சாட்டின் பேரில்  தலைமை பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர். பல்வேறு முறைப்பாடுகள் பிரிவுகளின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் 54 வயதுடைய தலைமை பொலிஸ் பரிசோதகரான இவர்  களுத்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் நிலையமொன்றைச் சேர்ந்தவராவார். அம்பலாங்கொடை நோக்கிப் பயணித்த  பஸ்ஸில்  பயணித்த பயிற்சி தாதி ஒருவர் அருகில் நின்றிருந்த பொலிஸ் பரிசோதகர் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டுள்ளதாகவும்  இதனையடுத்து குறித்த பஸ்ஸில் சென்ற பயணிகள்   ஆத்திரமடைந்து பரிசோதகரை தாக்கி   பொலிஸில்  ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!