இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?
27 Oct, 2026
கள்ளிக்குடி காவல்துறையினர் அவரை அவசர மருத்துவ வாகனம் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நாகலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை
நாகலட்சுமி கொண்டுவந்திருந்த கைப்பையைச் சோதித்தபோது, அதில் கடிதம் ஒன்று இருந்தது. " மையிட்டான் பட்டி கிராமத்தில் 100 நாள் பணித்திட்டப் பொறுப்பாளராக பணிபுரிய கலெக்டர் அய்யா என்னை நியமித்தார்.
ஆனால், அந்த வேலையை எனக்குக் கொடுக்க மாட்டேன் என்று அந்த ஊர் மெம்பர் வீரகுமார், பாலமுருகன் மற்றும் கிளார்க் முத்து என்னை மிகவும் தவறாகப் பேசி என் மனது வருந்தும்வரை என்னைக் கேட்டார்கள்.
நான் கள்ளிக்குடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தேன். ஆனால், அவர்கள் என்னை திட்டி தற்கொலை முயற்சிக்கு ஈடுபடுத்திவிட்டார்கள்.
எனக்கு ஐந்து பெண் குழந்தை. அதனால் வேலை கேட்டது தவறா? கிளர்க், வீரகுமார், பாலமுருகன் என்னை வேலையைவிட்டு விலகச் சொன்னார்கள். அப்படியென்றால் மையிட்டான்பட்டியில் கிளர்க், மெம்பர் வீரகுமாரை வேலையைவிட்டு எடுக்க வேண்டும்.
என் தற்கொலை முயற்சிக்கு முக்கிய காரணம் அவர்கள்: மையிட்டான்பட்டி கிளர்க் முத்து, வீரகுமார், பாலமுருகன். என்னை அடிக்க கை ஓங்கி அசிங்கப்படுத்திவிட்டார்கள். இதை செய்தித்தாளில் போடவும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
குடும்பத்தினர் கூறுவது என்ன?
இந்த சம்பவம் குறித்து பிபிசியிடம் பேசிய நாகலட்சுமியின் கணவர், "ஒன்றரை வருடமாக என் மனைவி இந்த வேலையைப் பார்த்து வருகிறார்.
ஆனால், சமீபமாக வீரகுமாரும் துணைத் தலைவர் நாகரத்தினத்தின் கணவர் பாலமுருகன், எழுத்தர் முத்து ஆகியோர் அவரை வேலை பார்க்கவிடவில்லை.
அவர்கள் இப்படி தகராறு செய்வதால், இந்த வேலை நமக்கு வேண்டாம், கடன் வாங்கி உணவகம் நடத்தலாம் என்று சொல்லி, எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன். இருந்தாலும் ஒன்றரை வருடமாக பார்த்துவரும் வேலையை ஏன் விடவேண்டும் என்று கூறி அவள் தொடர்ந்து முயன்றாள்.
இவர்கள் மூவரும் 100 நாள் வேலைத்திட்டத்தில் செய்யும் முறைகேடுகளுக்கு நாகலட்சுமி ஒத்துழைக்காததால்தான் அவளை இந்த வேலையை அவர்கள் செய்யவிடவில்லை. இப்போதுவரை அவர்களைக் கைதுசெய்யவும் இல்லை" என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திவரும் கூடுதல் ஆட்சியர் சரவணனிடம் இது குறித்து கேட்க முயன்றபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை.
குற்றம்சாட்டப்பட்டுள்ள வீரகுமார், பாலமுருகன், முத்து ஆகிய மூவரும் தற்போது தலைமறைவாகியுள்ளனர். காவல்துறையினர் அவர்களைத் தேடிவருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!