12 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட பாலம் வழியாக சீனா சென்றார் வடகொரிய ஜனாதிபதி
25 Oct, 2026
இதுதொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், அந்த விமானம் லாண்டிங் கியர் கீழே உள்ளபடி அதிவேகமாக தரை இறங்க முயன்றமைத காண முடிகிறது. ரஷ்ய செய்தி ஊடகங்களில் வெளியான இந்த வீடியோவை ராய்ட்டர்ஸ் செய்தி முகமை சரிபார்த்து உறுதி செய்துள்ளது. தரையிறங்க முயற்சிப்பது போல தோன்றிய சில நொடிகளில், விமானம் வெடித்து ஒரு பெரிய தீப்பிழம்பு உண்டானது.New video shows plane carrying 72 people crashing near Aktau Airport in Kazakhstan. At least 10 survivors pic.twitter.com/SKGdc1vqFa
— BNO News (@BNONews) December 25, 2024
அவசர கால சேவைகள் துறையினர் தீயை அணைப்பது மற்றும் விமான இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்பது ஆகியவை அடங்கிய, உறுதிப்படுத்தப்படாத வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த எம்ப்ரேயர்-190 ரக விமானத்தில் 62 பயணிகளும், 5 பணியாளர்களும் இருந்ததாக அஜர்பைஜான் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலும் அஜர்பைஜான் நாட்டை சேர்ந்தவர்கள். ரஷ்யா, கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சில பயணிகளும் அதில் இருந்தனர். விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. "விபத்து குறித்து அறிந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உதவ எல்லா வகையிலும் தயாராக இருந்ததாக" எம்ப்ரேயர் விமான தயாரிப்பு நிறுவனம் தெரிவித்ததுள்ளது.BREAKING: Passenger plane crashes near Aktau Airport in Kazakhstan pic.twitter.com/M2DtYe6nZU
— BNO News (@BNONews) December 25, 2024
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!