news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கடந்த 22 நாட்களில் இடம்பெற்ற- 135 விபத்துக்களில் 142 பேர் மரணம்

26 Jan, 2026
2026ம் ஆண்டின் முதல் 22 நாட்களில் 135 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், 142 பேர் விபத்துக ளில் உயி ரிழந்துள்ளதாக கூறியுள்ள அமைச்சர் ஆனந்த விஜேபால, நாளொன்றில் 8 பேர் வீதி விபத்து களால் உயிரிழப்பதாகவும் தெரிவித் துள்ளார். கொழும்பில் நேற்றுமுன் தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண் டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், நாளொன்றுக்கு வீதி விபத்துக்களால் சுமார் 7 அல்லது 8 பேர் உயிரிழக்கின் றனர். கடந்த 22 நாட்களி ல் மட்டும் 135 விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்துகளினால் 142 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 15 பேர் சாரதிகள், 50 பேர் பாதசாரிகள், மற்றைய அனைவரும் பயணி களாவர், நாட்டில் வீதி விபத்து ஒரு சமூக பிரச்சினையாக மாறியிருக்கி றது. கடந்த 22 நாட்களில் போதைப் பொருள் பயன்படுத்திவிட்டு வாக னம் செலுத்திய 480 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!