news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கடந்த 24 மணி நேரத்தில் 07 விபத்துகள்: 07 உயிரிழப்புகள்

05 Mar, 2024
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 07 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அந்த விபத்துக்களில் 07 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (04) பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கிச் சென்ற வேன் ஒன்று எல்ல – ஹாலிஎல, பெரகல வீதியில் மில்லகம சந்திக்கு அருகில் பாதசாரிக் கடவையைக் கடந்த ஒருவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் 89 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், கொரத்தோட்டையிலிருந்து வதுரமுல்ல நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று பெண் ஒருவர் மீது மோதியதில் கொரதொட்டை, கடுவெல பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு பெலியத்த – தங்கல்ல வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிட்டினமலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், புறக்கோட்டை -பஸ்தியான் மாவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தெஹிவளையைச் சேர்ந்த 74 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், களுவாஞ்சிகுடி பகுதியில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் எருவில் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் கொழும்பு – மட்டக்களப்பு வீதியின் ஹிஹ்கஹஹேன பகுதியில் முச்சக்கரவண்டியுடன் லொறியொன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் தலாவ பிரதேசத்தில் பாதெனிய அனுராதபுரம் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!