38 பேரை கொன்று தின்ற கொடூரக் கொலைக்காரன்
27 Oct, 2026
மார்ச் 1ம் தேதி நடந்த சம்பவம் ஓமன் கடற்கரையிலிருந்து 44 கடல் மைல் தொலைவில், மார்ஷல் தீவுகளின் கொடியுடன் சென்ற 'MKD VYOM' என்ற கச்சா எண்ணெய் டேங்கர் தாக்கப்பட்டது. ஒரு டிரோன் படகு கப்பலின் எஞ்சின் அறையைத் தாக்கி வெடிப்பு மற்றும் தீ விபத்தை ஏற்படுத்தியதில் ஒரு ஊழியர் உயிரிழந்ததாகப் பிரிட்டனின் கடல்சார் வர்த்தக அமைப்பு தெரிவித்தது. சில நாட்களுக்குப் பிறகு ஈராக்கின் கோர் அல் ஜுபைர் துறைமுகம் அருகே நின்றிருந்த பஹாமாஸ் நாட்டு கொடியுடன் கூடிய 'Sonangol Namibe' என்ற டேங்கர் கப்பல் தாக்கப்பட்டது. இதில் இருந்த 23 ஊழியர்களும் காயமின்றி தப்பினர். இதனிடையே இண்டர்நெட்டில் பரவிய வீடியோ ஒன்றில், அதிவேகப் படகு போன்ற ஒரு பொருள் டேங்கர் கப்பலை நோக்கிச் சென்று அதன் பக்கவாட்டில் மோதி பெரும் வெடிப்பை ஏற்படுத்துவதும், கரும்புகை வெளியேறுவதும் பதிவாகி இருந்தது உலகளாவிய தாக்கம் உக்ரைன் - ரஷ்யா போர் மற்றும் செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்திய அதே உத்தியை தற்போது ஈரானும் கையாண்டு வருகிறது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. தற்போதுள்ள போர் சூழலில், இந்த வழியாக எண்ணெய் கொண்டு செல்வதை நிறுத்துவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. புதன்கிழமை அன்று வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 200 டாலரை எட்டும் என்பதால் உலகம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என ஈரான் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.Iran published footage of underground tunnels stocked with naval drones, anti-ship missiles, and sea mines. Reuters reported, citing US officials, that Iran has mined the Strait of Hormuz with dozens of sea mines. #Iran pic.twitter.com/Kcwp5UqkXq
— NOELREPORTS 🇪🇺 🇺🇦 (@NOELreports) March 11, 2026
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!