உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
பெட்ரூம் இதனால் மேலும் சந்தேகமடைந்த சசிகலா, சிவரஞ்சனியின் வீட்டிற்கு சென்று கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்...
அங்கு பெட்ரூமில் கட்டிலுக்கு அடியில் பிளாஸ்டிக் பையில் சுருட்டி வைக்கப்பட்ட நிலையில் சிவரஞ்சனி பிணமாக கிடந்ததை கண்டு அலறினார்..
உடல் அழுகி கிடந்ததை பார்த்து சத்தம் போட்டார்... கொள்ளிடம் போலீசாருக்கு உடனடியாக தகவல் தரப்பட்டது..
போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணையை ஆரம்பித்தனர்.. தம்பதிக்குள் தகராறு நடந்ததால், கடந்த 3-ந் தேதி நள்ளிரவில், நரசிம்மராஜ், சிவரஞ்சனியை கத்தியால் குத்தி கொன்றுள்ளது தெரியிவந்தது.
கட்டிலுக்கு கீழே சிவரஞ்சனியின் நகைகளையும், வீட்டில் பீரோவில் இருந்த நகைகளையும் எடுத்துக்கொண்ட நரசிம்மராஜ், சிவரஞ்சனி உடம்பெல்லாம் மஞ்சள் பொடியை பூசிவிட்டு, ஒரு பிளாஸ்டிக் பையில் சடலத்தை கட்டிவிட்டு, அந்த சடலத்தை கட்டிலுக்கு கீழே சுருட்டி வைத்துவிட்டு, மகள்களையும், அம்மாவையும் அழைத்துக்கொண்டு தப்பிச்சென்றது தெரியவந்தது..
மகள்கள் இப்போதைக்கு ஆந்திராவில் இருக்கிறார்கள்.. ஆனால், நரசிம்மராஜும், அவரது அம்மாவும் எஸ்கேப் ஆகிவிட்டனர்..
அம்மாவும் தலைமறைவாக உள்ளதால், அவருக்கும் இந்த கொலையில் தொடர்பிருப்பதாக தெரிகிறது.. தாய் - மகன் இருவரையுமே போலீசார் தேடி வருகிறார்கள்.
கட்டிலுக்கு அடியில்.. கட்டிலுக்கு அடியில் சடலம் கிடந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது..
முதலில், சசிகலா, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார்.. அப்போது சிவரஞ்சனியின் கால்கள் மட்டும் தெரிந்திருக்கிறது..
அதைப் பார்த்து அதிர்ந்துபோய், கதவை உடைத்து கொண்டுதான் உள்ளே போய் பார்த்துள்ளார்..
சிவரஞ்சனியின் உடலில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்துள்ளன.. மஞ்சள் பொடி நெடி அதிகமாக வந்துள்ளது..
இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், ஆன்லைன் சூதாட்டத்தில் நரசிம்மராஜ் பணத்தை இழந்துள்ளதாக தெரிகிறது..
இந்த விஷயம் தெரிந்துதான், சிவரஞ்சனி கண்டித்துள்ளார். அதனாலேயே கொலை செய்திருக்கக்கூடும் என போலீஸார் கருதுகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!