news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கணவனின் கழுத்தை ஆயுதத்தால் குத்தி  தலை கோடாரியால்   தாக்கி மனைவி!!

21 Apr, 2020
  கண்டி – கட்டுகஸ்தோட்ட பகுதியில் பெண் ஒருவர் அவரது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கட்டுகஸ்தோட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யட்டிவாவெல பகுதியில் வீடு ஒன்றில் நேற்று திங்கட்கிழமை கணவன், மனைவிக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இருவரக்குமிடையிலான மோதலாக மாறியதைடுத்து மனைவி தனது கணவனின் கழுத்தை கூரிய ஆயுதத்தால் குத்தியதுடன் பின்னர் கோடரியாலும் அவரது தலையைத் தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த நபர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 42 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் அவரது மனைவி சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுகஸ்தொட்ட பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!