பாலஸ்தீனியர்களை அழித்தொழித்து இடம்பெயரச் செய்யும் நடவடிக்கைகளை இஸ்ரேல் தொடர்கிறது: ஐ.நா ஆணையம்...
28 Oct, 2026
வளர்ப்பு மகனை திருமணம் செய்த மரினா
தற்போது 35 வயதாகும் மரினா 2007-ம் ஆண்டு தனது 22 வயதில் அலெக்சி என்பவரை திருமணம் செய்துள்ளார்.
அலெக்சிக்கு ஐந்து மகன்கள். அதில் 2-வது மகன்தான் விலாடிமிர் ஷவ்ரின். அப்போது விலாடிமிர்-க்கு வயது 7. 10 ஆண்டுகளுக்குப்பின் அலெக்சியிடம் இருந்து விவாகரத்து வாங்கிவிட்டார்.
பின்னர் மரினா விலாடிமிர் மற்றும் அவனது சகோதரர்கள் மூன்று பேருடன் வசித்து வந்தார். இந்நிலையில்தான் விலாடிமிர் மீது மரினாவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விலாமிரிடம் தெரிவிக்க அவனும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
விலாடிமிர் உடன் இணைந்து குழந்தை பெற்றெடுக்க மரியான விரும்பினார். மரினா தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.
குழந்தை பிறப்பதற்கு முன் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். அருகில் உள்ள ரிஜிஸ்டர் அலுவலகம் சென்று திருமணம் செய்துள்ளனர். விரைவில் குழந்தை பிறக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
‘‘திருமணம் முடிந்த பிறகு திருமண ஆடை அணிந்து சந்தோசமாக அருகில் உள்ள ரெஸ்டாரன்டில் விருந்தினர்களுடன் வரவேற்பை கொண்டாடினோம்.
தற்போது நாங்கள் குழந்தையை எதிர்பார்த்துக் கெண்டிருக்கிறோம். இதைவிட பெரிய நகரத்திற்கு செல்ல விரும்புகிறோம். முன்னாள் கணவரிடம் நாங்கள் பேசுவதில்லை. நாங்கள் திருமணம் செய்ததை அவர் விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.
வளர்ப்பு மகனை திருமணம் செய்த மரினா
வாழ்க்கை எப்படி திரும்பும் என்று உங்களுக்கு தெரியாது. ஒரு நபரை சந்திக்கும்போது, உங்களை மகிழ்ச்சியுடைவராக உருவாக்கும். சிலர் எதிர்ப்பார்கள். சில ஆதரிப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், நாங்கள் மிகிழ்ச்சியாக இருக்கிறோம். நீங்களும் மகிழ்ச்சிய இருக்க விரும்புகிறேன்’’ மரினா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!