‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை ; சந்தேகநபர் தொடர்பில் தகவல் வழங்கினால் ரூ.12 இலட்சம் சன்மானம்
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’வின் கொலையுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபரைக் கைது செய்வதற்கு தகவல் வழங்குபவர்களுக்கு 12 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதிமன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் பெண் சந்தேகநபர் தலை மறைவாகியுள்ளார்.
அவரை கைது செய்வதற்கு உண்மையான தகவல்களை பொதுமக்களை வழங்குமாறு கோரி பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தகவல்களை பின்வரும் எண்களுக்குத் தெரிவிக்கலாம்:
• பணிப்பாளர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு (CCD): 071-8591727
• பொறுப்பதிகாரி (OIC), கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு (CCD): 071-8591735
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!