news@ilakkiyainfo.com

பிரிவுகள்

“கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக்கொலை ; பிரதான சந்தேக நபருக்கு உதவிய பெண்ணை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரல்; பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

20 Feb, 2025
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் புதன்கிழமை (19) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு உதவியதாக கூறப்படும் பெண் ஒருவரை கைது செய்ய கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் சட்டத்தரணி வேடத்தில் சென்று பிரதான சந்தேக நபருக்கு உதவி செய்ததாக கூறப்படும் பெண்ணின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தில் உள்ள பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவின் 071 - 8591727 அல்லது 071 - 8591735 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடரப்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரான பெண்ணின் விபரங்கள் ; பெயர் - பிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி வயது - 25 தேசிய அடையாள அட்டை இலக்கம் - 995892480v முகவரி - இல. 243/01, நீர்கொழும்பு வீதி, ஜய மாவத்தை, கட்டுவெல்லேகம பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் புதன்கிழமை (19) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 25 வயதுடைய பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக்கொலை செய்வதற்கு சட்டத்தரணி வேடத்தில் சென்ற பிரதான சந்தேக நபருக்கு உதவி செய்த பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்புகளை பேணி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!