கண்டியில் மீண்டும் நில அதிர்வு! அச்சத்தில் மக்கள்
கண்டியில் மீண்டும் நில அதிர்வு பதிவாகியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி – திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் மற்றொரு சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது என குறிப்பிடப்படுகின்றது.
குறித்த நில அதிவு ரிக்டர் அளவில் 1.79 ஆக பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த 2 ஆம் திகதி கண்டி, ஹாரகம மற்றும் அநுரகம ஆகிய பகுதிகளில் நில அதிர்வு பதிவாகியது.
குறித்த பகுதியில் பாரியளவில் முன்னெடுக்கப்படும் சுண்ணாம்புக்கல் அகழ்வு காரணமாகவே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதென பிரதேசமக்களும் சூழலியலாளர்களும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!