கண்டி தனியார் பாடசாலையில் 10 மாணவர்களை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் அதிபர், ஆசிரியர்கள் உட்பட ஆறு பேர் கைது
கண்டி தனியார் பாடசாலையொன்றில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை அதிபர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கண்டி பிரதேச சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) இரவு பெண்கள் விடுதிக்குள் இரகசியமாக ஐந்து ஆண் மாணவர்கள் நுழைந்ததாகவும் இது குறித்து எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கையின் போதே மாணவர்கள் தாக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதேவேளை மாணவிகளின் சம்மதத்துடனேயே மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் தாக்குதலுக்கும் கொடுமைக்கும் ஆளாகியிருப்பதாகவும் அவர்களின் தலைமுடி கூட வெட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் விடுதி காப்பாளர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் மார்ச் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!