கனமழை காரணமாக கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் தற்காலிகமாக மூடல்
கிழக்கு மாகாணத்தில் நீடித்து வரும் சீரற்ற மற்றும் கனமழை காரணமாக, மாகாணத்தின் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் இன்று (27) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
தென் மேற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் உருவான காற்றுச் சுழற்சிகள் ஒன்றிணைந்து தாழமுக்கமாக மாறுவதால், வடக்கு–கிழக்கு மற்றும் பல மாகாணங்களில் கனமழை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், கிழக்கு மாகாண முன்பள்ளிகளும் 30ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளன. வெள்ள அபாயம் அதிகரித்துள்ள நிலையில், மக்களுக்கு அதிக கவனத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!