ஆசியா மற்றும் பூர்வீக அமெரிக்க கலாச்சாரங்களுக்கு மத்தியில், பாம்பு என்பது ஞானத்தின் மூலமாகும். பாம்பு அதன் தோலை உரித்து, மீண்டும் புது தோலை பெறும் ஆற்றலில் இருந்து தான் இந்த ஞானத்தின் யோசனை தோன்றியது. இந்த அடிப்படையில் ஒருவர் பாம்பைக் பற்றி கனவு கண்டால், புதுப்பித்தல், பிரச்சனையை போக்குதல் மற்றும் நல்ல விஷயங்கள் பற்றியான கனவாகும் அது.
கருவுறும் பாம்பு
கருவுறும் தன்மை, பிறப்பு, இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் போன்றவற்றை குறிக்கும் உயிரினமாக, பாம்பை பழங்காலத்தில் அனைத்து திசையிலும் வழிபட்டு வந்தனர். உலகத்தை அரவணைத்த படி உள்ள பாம்பு என்பது பொதுவாக உள்ள ஒரு சித்திரமாகும்.நார்டிக் ஜோர்முன்கந்தர் முதல் இந்துக்கள் வரை, உலகத்தை ஒன்றாக வைத்திருக்கும் பொறுப்பை பாம்பு கொண்டுள்ளது என இந்த சித்திரம் மூலம் நம்பி வந்துள்ளனர். இந்த அண்ட பாம்பு, முட்டையைச் சுற்றி வளைத்துள்ள வண்ணம் இருப்பதால், கருவுறும் தன்மை மற்றும் மறு பிறப்பு, அண்டத்தின் உருவாக்கம் போன்றவற்றை தெளிவாக இது குறிக்கும்.
அழிக்கும் பாம்பு
கனவில் வரும் மரணம் எப்போதுமே மாற்றத்தை குறிக்கும். கனவில் வரும் பாம்பு உங்களை கடிப்பதன் மூலம், அல்லது கொத்துவதன் மூலம், அல்லது விழுங்குவதன் மூலம், அல்லது வேறு ஏதேனும் வழியில் உங்களை அழிக்க முற்பட்டால், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தடுத்து, வாழ்க்கையின் நல்ல விஷயங்கள் (நம்பிக்கை, உறவு, போன்றவைகள்) போவதற்கான ஒரு அழைப்பாக அதனை நீங்கள் கருதலாம். இதை இப்படியும் சொல்லலாம் - வேறு ஒன்றை பெறுவதற்காக மற்றொன்றை இழக்க போகிறீர்கள்.
சுகவீனத்தையும் கூட பாம்புகள் குறிக்கும்
உங்கள் கனவில் பாம்பிற்கு காயம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது சுகமற்று இருந்தாலோ, உங்களுக்குள் ஏதோ ஒன்று சரியாக செயல்படவில்லை என அர்த்தமாகும். அதேப்போல் உங்களை கடிக்க பாம்பு முயற்சி செய்தால், வரப்போகும் சுகவீனத்தை அது குறிக்கலாம்.
உங்களுக்கு மட்டும் தான் தெரியும் பாம்பு வந்த கனவின் அர்த்தம் என்னவென்று. இத்தகைய அடுக்குகளைப் பார்க்கையில் பல முக்கிய தகவல்களை நாம் பெறலாம் அல்லது ஒன்றையுமே அறிய முடியாமலும் போகலாம். பாம்பு கடிப்பது போல் கனவு காணும் அனைவருக்குமே சுகவீனம் ஏற்படுவதில்லை.
கனவில் வரும் பாம்பைப் பற்றி இஸ்லாமிய மதம் கூறுவது என்ன?
இஸ்லாமிய மதத்தில் பாம்பினை ஒரு தீய உயிரினமாக பார்க்கப்படுகிறது. வரப்போகும் பிரச்சனை அல்லது தெரியாத ஆபத்தை அவை குறிக்கும். உங்கள் கனவில் உங்களை பாம்பு துரத்தினால், கடித்தால் அல்லது வீட்டிற்குள் நுழைந்தால், உடனடி கவனம் தேவைப்படும் அளவிற்கு உங்கள் வாழ்வில் மோசமாக ஏதோ ஒன்று நடக்க போகிறது. மறுபுறம், பாம்பை வெல்வதை போல் கனவு கண்டால், உங்களது கடினமான சூழ்நிலைகளை கையாளக்கூடிய உங்களது தனிப்பட்ட சக்தி மற்றும் ஆற்றலை குறிக்கும்,.
கிறிஸ்துவ மதத்தில் பாம்புகளின் பங்கு
கிறிஸ்துவர்கள் மற்றும் யூதர்கள் பகிர்ந்து கொள்ளும் ஹீப்ரு பைபிளில் பாம்பிற்கு முக்கிய இடமுள்ளது. ஈடன் தோட்டத்தில் ஆதாம் மற்றும் ஏவாளை, ஞானத்தின் மரத்தில் இருக்கும் கனியை உண்ணுமாறும், அப்படி செய்தால் அவர்கள் சாகாமல் இருப்பார்கள் என்றும், ஒரு பாம்பு ஏமாற்றியது.தோட்டத்தில் இருந்த இந்த பாம்பு பாலியல் ஆசைகளைக் குறிக்கும் என சில விளக்கங்கள் கூறுகிறது. அதனால் தூய்மையை மனிதன் இழந்தான் என்றும் கூறுகிறது. ஆனால் வேறு சிலரோ இந்த பாம்பை ஞானத்தை தூக்கிச் செல்லும் ஒன்றாகவும் கருதுகின்றனர். புதிய கிறிஸ்துவ ஏற்பாட்டில் பாம்புகள் சாத்தானாக கருதப்படுகிறது.
ஒழுக்கமற்ற குணங்களைக் குறிக்கும்
பாம்பைப் பற்றி கனவு என்றால் கிறிஸ்துவ மதமும், யூதர்களின் மதமும் பலவற்றை கூறுகின்றன. அதில் முக்கியமான ஒன்று, பாம்பு என்றால் மோசடியை குறிக்கின்றன, ஒன்று அது நீங்களாகவே இருக்கலாம் அல்லது மற்றவர்களாக இருக்கலாம். பாம்புகளைப் பற்றிய கனவு என்றால் அது பாலியல் ஆசையையும் குறிக்கலாம். குறிப்பாக நீங்கள் வெட்கப்படும் அல்லது தவறு என நினைக்கக்கூடிய ஆசைகள்.
பாம்பைப் பற்றிய கனவுகளைப் பற்றி சீனர்களின் விளக்கம்
சீன ராசி படி, பாம்புகள் புத்திசாலியான உயிரினமாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் கூட அவை மர்மமான ஒரு பிராணியாகும்.சற்று சூழ்ச்சி கொண்டவையும் கூட. இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மத சித்தாந்தங்களில் பார்க்கப்படுவதை போல் சீனர்கள் இதனை அவ்வளவு தீய உயிரினமாக கருதவில்லை. கனவில் பாம்பு ட்ராகனாக உருமாறினால் அது தனிப்பட்ட வளர்ச்சியின் அறிகுறியாகும்.
பாம்பு என்பதே சக்தி மற்றும் பலத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது. உங்களை பாம்பு தாக்க முற்பட்டால், அதற்கான உங்களின் எதிர்ச்செயல் உங்கள் கனவில் அர்த்தத்தை கூறும். சவால்களை எதிர்கொள்ளும் உங்கள் திறனையும் அது குறிக்கும்.
பாம்புகள் கனவில் வருவதற்கான விளக்கம்
பல கனவுகள் நம் இறந்தகால மற்றும் நிகழ்கால நிகழ்வுகளுக்கு உங்கள் ஆழ்மனதில் உள்ள எதிர்ச்செயலாகும். தொந்தரவளிக்கும் நினைவுகள் அல்லது மோசமான குழந்தை பருவ நினைவுகள் போன்றவைகள் இருந்தால், அவை உங்கள் கனவில் பாம்பாக பிரதிபலிக்கும்.அதனால் உங்களது மோசமான முன்னாள் அனுபவங்களை கடந்து செல்ல டைரி எழுதுங்கள் அல்லது மனநல மருத்துவரை சந்தியுங்கள். இதனை சரி செய்யாமல் விட்டு விட்டால், இந்த பிரச்சனைகள் பாம்பின் ரூபத்தில் உங்கள் கனவில் வந்து உங்களை பாடாய் படுத்தும்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!