கம்பஹா படல்கம கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடிவிபத்து; 19 தொழிலாளர்கள் காயம்; ஒருவர் பலி
கம்பஹா, படல்கம பகுதியில் உள்ள கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வெடிவிபத்தில் 19 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை இரவு முதல் இயங்கி வந்த கொதிகலன் அதிக வெப்பம் காரணமாக வெடித்து சிதறியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!