news@ilakkiyainfo.com

பிரிவுகள்

"கலவரபூமியாகியது இலங்கை : 2000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்,அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறை!

09 May, 2022
காலி முகத்திடலில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த போராட்டக்காரர்கள் மீது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து அந்தப் பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் நிலவி வருகின்றது. இன்று இடம்பெற்ற களேபரத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கண்டித்துள்ளதுடன், முழுமையான விசாரணை நடத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார். அரசாங்க ஆதரவாளர்கள் பயணித்த பஸ் மீது மஹரகமவில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. “கோட்டா ஹோ கம” வின் மீது தாக்குதல் நடத்திய ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் சிலர், போராட்டக்கார்களிடம் சிக்கிக்கொண்டனர். அவர்களை போராட்டக்காரர்கள் முழந்தாளிட வைத்துள்ளனர். கொழும்பில் உள்ள மைனாகோகம மற்றும் கோட்டாகோகம போராட்டத் தளங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 78 பேர் காயமடைந்துள்ளனர். 2000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் இன்று (09) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் காலி முகத்திடல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் சிக்கிய ராஜபக்ஷ ஆதரவாளரை தூக்கி குப்பை வண்டியில் போட்டு தள்ளிக்கொண்டு போகும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் குதித்திருப்போர் 40 க்கும் மேற்பட்டோர் காயம், அம்புலன்ஸ் சமிஞ்சை ஒலி​ சத்தம் சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக கேட்கிறது. காலி முகத்திடலில் துரத்தப்பட்ட பிரதமரின் ஆதரவாளர்கள் பேரவெவவில் குதித்து தத்தளிக்கின்றனர்  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!