சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு!!
28 Oct, 2026
இதன் பின்னர் காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள கோட்டா கோ கம பகுதிக்கு விரைந்த அரச ஆதரவாளர்கள் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டதுடன் கலக செயல்களில் ஈடுபட்டுவருவதுடன், காலி முகத்திடலில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களினால் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களை தகர்த்தெறிந்து தீயிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கலகக்காரர்களை அடக்கும் முகமாக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த கலக நடவடிக்கைகளின் காரணமாக காயமடைந்துள்ள 9 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் பொலிஸ் தடையை மீறி காலி முகத்திடல் போராட்டக்களத்தில் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது கலவரம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!