news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கழிவறை குழியில் விழுந்து பெண் ஒருவர் பலி!

05 Feb, 2024
ஹோமாகம பகுதியில் பாதுகாப்பற்ற கழிவறை குழியில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது மகளின் இல்லத்தில் வசித்து வந்த குறித்த பெண் 8 அடி ஆழமான கழிவறை குழியில் விழுந்துள்ளார். பாதுகாப்பற்ற கழிவறை குழியில் விழுந்த பெண் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த பெண் 68 வயதுடைய பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!