கழுத்தில் பாய்ந்த கூரிய தடி : வெற்றிகரமாக அகற்றம்
வவுனியாப் பொதுவைத்தியசாலையில் கழுத்தில் கூரியதடி குற்றி உயிருக்கு ஆபத்தான நிலையில்செவ்வாய்க்கிழமை (24) அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு வைத்தியர்கள் மேற்கொண்ட சத்திரசிகிச்சையினால் கூரியதடி அகற்றப்பட்டதுடன் அவர் உயிர் பிழைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் கழுத்தில் கூரியதடி குற்றி மறுபக்கம் வந்த முதியவர் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குறித்த முதியவருக்கு வைத்தியசாலையில் உரிய நேரத்தில் விரைவாக முன்னெடுக்கப்பட்ட சத்திரசிகிச்சைமூலம் அவரது கழுத்தில் குற்றிய தடி அகற்றப்பட்டதுடன் அவர் உயிராபத்தின்றி காப்பாற்றப்பட்டார்.
இவ் வெற்றிகரமான சத்தி்சிகிச்சையினை உணர்வழியியல் மருத்துவநிபுணர் நாகேஸ்வரன் தலைமையிலான மயக்கமருந்து (Anesthesia) அணியினருடன் இணைந்து
சத்திரசிகிச்சை நிபுணர் ரஜீவ் நிர்மலசிங்கம் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!