ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
படத்தில் வரும் பெரிய பெரிய மோதல்களை, பிரச்சனைகளை வாட்ஸப்பில் வரும் ஏதாவது ஒரு மொக்கை வசனத்தைப் போன்ற ஒன்றைச் சொல்லி தீர்த்துவைத்துவிடுகிறார்கள். யோகி பாபுவும் ரெடின் கிங்க்ஸ்லியும் வரும் காமெடி காட்சிகளும் பெரிதாக ஒர்க் - அவுட் ஆகவில்லை. யுவன் சங்கர் ராஜாவின் இசையோ அல்லது யாருடைய நடிப்போ படத்தை தூக்கி நிறுத்த எந்த விதத்திலும் உதவவில்லை" என்கிறது The Hindu.
சிரிப்புக்குப் பஞ்சமில்லை
சுந்தர்.சி படம் என்றாலே சிரிப்பிற்கு பஞ்சம் இருக்காது என்ற நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை காப்பாற்றியிருக்கிறார் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய தளம்.
"முக்கோண காதல் கதைகள் தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல என்றாலும் அதை மீண்டும் ஒரு முறை புதுப்பித்து அழகாக திரைக்கதை அமைத்து, அற்புதமான ஒரு ஜாலியான திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி.
பல வருட காலமாக ஒரு நல்ல வெற்றிக்கு ஏங்கும் ஜீவாவிற்கு கம் - பேக்காக இப்படம் அமைந்துள்ளது.
அவருடைய எதார்த்தமான நடிப்பு மீண்டும் 'சிவா மனசுல சக்தி' ஜீவாவை நினைவூட்டுகிறது. பிரிந்த காதலை நினைத்து கலங்கும் காட்சிகளில் சிறந்த நடிகராகவும் திகழ்கிறார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் ரீஎன்ட்ரீ கொடுத்திருக்கிறார் ஶ்ரீகாந்த். அவருக்கு மற்றுமொரு சிறப்பான கதாபாத்திரம். மனைவி இருக்கும் போதே வேறு பெண்ணுடன் சபலம் கொண்டு, பின் தன் தவறை உணர்ந்து திருந்தும் மியூசிக் டீச்சராக சிறப்பாக நடித்துள்ளார்.
ஜெய்க்கு மற்றுமொரு ஜாலியான ரோல், அதனை தரமாக செய்துள்ளார். மேரேஜ் காண்ட்ராக்டர்களாக வரும் யோகி பாபுவும், ரெடின் கிங்ஸ்லியும் சிரிப்பை வாரி வழங்கியிருக்கிறார்கள்.
மறைந்த பிரதாப் போத்தனின் நடிப்பு யதார்த்தம். திவ்யதர்ஷினிக்கு ஒரு குட்டி கேரக்டர் என்றாலும் அதை அழகாக செய்து இருக்கிறார்.
சுந்தர்.சி படம் என்றாலே சிரிப்பிற்கு பஞ்சம் இருக்காது என்ற நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை காப்பாற்றியிருக்கிறார். சில காட்சிகள் குடும்ப ரசிகர்களுக்கு சற்று நெருடலை ஏற்படுத்தலாம்.
இது போன்ற ஒரு கடினமான கதையை வைத்துக்கொண்டு அதற்கு சிறப்பான திரைக்கதை அமைத்து படத்தை ஜாலியாக கொண்டு சென்று இறுதியில் படம் முடிந்து வெளியே வருபவர்கள் ஒரு புன்சிரிப்புடனும் ஒரு நல்ல இதயபூர்வமான படம் பார்த்த திருப்தியில் வருகிறார்கள்
மொத்தத்தில் காபி வித் காதல் - ஆனந்தம்" என மிக பாசிட்டிவான ஒரு விமர்சனத்தைத் தந்துள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.
இயக்குநர் சுந்தர். சி. தனது வழக்கமான பாணியில் சென்றிருந்தால் இன்னும் கலகலப்பான திரைப்படமாக வந்திருக்கும் என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் விமர்சனம்.
"கதையில் இருக்கும் குழப்பம் உங்கள் தலையைச் சுற்ற வைக்கிறதென்றால், பலவீனமான திரைக்கதையும் சுமாரான நடிப்பும் நம்முடைய மனநிலையை இன்னும் மோசமாக்குகின்றன. இதற்கு நடுவில், "ஒய்ஃபை ஒய்ஃபா பார்த்தா பிரச்சனைதான். ஒய்வை லைஃபா பாரு", "அட்ராக்ஷன் ஆயிரம் பேரு மேல வரலாம். ஆனால், அஃபெக்ஷன் ஒருத்தர் கிட்டத்தான் வரும்" அரதப் பழசான வசனங்கள் வேறு.
படத்தில் இடைவேளைக்கு முன்பாக, குழப்பங்களை வைத்து செய்யும் தனக்கே உரிய காமெடிக்குத் திரும்பும்போது படத்தல் கலகலப்பு அதிகரிக்கிறது. இந்தக் காட்சிகளில் நடிகர்களும்கூட சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
அந்த வழியிலேயே இயக்குநர் சென்றிருந்தால், படம் எவ்வளவு பொழுதுபோக்காக அமைந்திருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. அப்படிச் செய்திருந்தால், இப்படி சுவையில்லாத ஒரு கலவைக்குப் பதிலாக காஃபி வித் கலகலப்பு வந்திருக்கும்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையும் மிக நிராசையான முயற்சியாக அமைந்திருக்கிறது." என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சனம்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!