news@ilakkiyainfo.com

பிரிவுகள்

காங்கேசன்துறை மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

14 Aug, 2025
யாழ்ப்பாணம் காங்கேசந்துறை பகுதியை சேர்ந்த இரு கடற்தொழிலாளர்கள் சென்ற படகு பழுதடைந்த நிலையில் தமிழக கடற்தொழிலாளர்கள் அவர்களை மீட்டு கரை சேர்த்துள்ளனர். காங்கேசன்துறையை சேர்ந்த வினோத்குமார் , சிந்துஜன் ஆகிய இருவரும் காங்கேசன்துறை கடற்கரையில் இருந்து சிறு படகில் கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் அவர்களது படகு திடீரென பழுதடைந்த நிலையில் , இந்திய கடல் எல்லைக்குள் தத்தளித்தவாறு காணப்பட்டுள்ளது. அதனை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகில் உள்ள ஆறுகாட்டுத்துறை பகுதி கடற்தொழிலாளர்கள் கண்ணுற்று , படகையும் இரண்டு கடற்தொழிலாளர்களையும் மீட்டு ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு கொண்டு சென்றனர். அதனை அடுத்து அவர்கள் இருவரையும் வேதாரண்யம் கடலோர காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ள நிலையில் , காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!