இஸ்ரேல் தேர்தல் நாளை: "சிறந்த போர்வீரர் என்பதை நினையுங்கள்" - நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் ஆதரவு
27 Oct, 2026
காசாவுக்கான உதவி விநியோகங்களை கடந்த மார்ச் 2ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேல் முடக்கி இருக்கும் சூழலில் அங்கு உணவு விநியோகங்கள் முற்றாக தீர்ந்துவிடும் நிலையை எட்டி இருப்பதாக உதவிக் குழுக்கள் எச்சரித்துள்ளன.
அனைத்து வகையான உதவிகளும் தீர்ந்திருப்பதாகவும் ரொட்டி மாத்திரமே எஞ்சி இருப்பதாகவும் பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவன முகாம் ஒன்றில் தஞ்சமடைந்திருக்கும் ஆறு குழந்தைகளின் தாய் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
‘இஸ்ரேல் இந்த முற்றுகைகளை அகற்றிக்கொள்ள வேண்டும்’ என்று அந்த ஐ.நா. நிறுவனம் எக்ஸ் சமூக தளத்தில் குறிப்பிட்டுள்ளது. ‘இந்த மனிதாபிமானப் பேரழிவு முன்னர் காணாத புதிய நிலை ஒன்றை அடைவதைத் தடுக்க ஓர் ஒருங்கிணைந்த சர்வதேச முயற்சி வேண்டும்’ என்று அது வலியுறுத்தியுள்ளது.
காசாவில் போர் நிறுத்தம் பற்றிய எதிர்பார்ப்பு குறைந்திருக்கும் நிலையில் மத்தியஸ்த பணியில் ஈடுபட்டு வரும் எகிப்து மற்றும் கட்டார் நேற்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில், காசாவில் மனிதாபிமான நெருக்கடி ஒன்றை கையாள்வதற்கு தொடர்ச்சியான மத்தியஸ்த முயற்சியில் ஈடுபடுவதாக உறுதியளித்துள்ளன.
பொதுமக்களை பாதுகாப்பது மற்றும் காசாவில் மனிதாபிமான நெருக்கடியை தீர்ப்பதை உறுதி செய்யும் வகையில் உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு அமெரிக்காவுடன் இணைந்து எகிப்து மற்றும் கட்டார் முயற்சி மேற்கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள யெமன் தலைநகர் சனாவின் பிரதான விமான நிலைத்தின் மீது இஸ்ரேல் நடத்திய உக்கிர தாக்குதலில் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
மூன்று சிவில் விமானங்கள், புறப்பாடு மண்டபம், ஓடுபாதை மற்றும் இராணுவ விமானத் தளம் ஒன்றை இலக்கு வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக விமானநிலைய வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் விமானநிலையம் முற்றாக அழிந்திருப்பதாக அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார். இதில் குறைந்தது மூவர்கொல்லப்பட்டதாகவும் பதிலடி நடத்தப்படும் என்றும் ஹூத்திக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மறுபுறம் ஹூத்திக்கள் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது. யெமனில் ஹூத்தி இலக்குகள் மீது குண்டு வீசுவதை அமெரிக்கா நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த செவ்வாயன்று குறிப்பிட்டார். மத்திய கிழக்கில் முக்கிய கப்பல் பாதைகளுக்கு இடையூறு செய்வதை நிறுத்துவதற்கு அந்தக் குழு இணங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் இந்தப் போர் நிறுத்தத்தில் இஸ்ரேல் உள்ளடக்கப்படவில்லை என்று ஹூத்திக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!