news@ilakkiyainfo.com

பிரிவுகள்

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 75 பேர் பலி

20 Oct, 2024
காசாவின் பெய்ட் லகியாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதல்களில் பெண்கள் குழந்தைகள் உட்பட 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் பலர் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளனர் என அங்குள்ள மருத்துவபணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உயிரிழப்புகள் குறித்த விபரங்களை ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் எனினும் ஹமாசின் தற்போதைய புள்ளிவிபரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 73 உயிரிழந்தனர் எனஹமாசின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வபா எனப்படும் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது என பாலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!