இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
உணவுவாகன தொடரணியை சூழ்ந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 110க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து காசாவிற்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்த நிலையிலேயே அமெரிக்கா இந்த நடவடிக்கையைமேற்கொண்டுள்ளது.
சி130 ரக விமானங்கள் 38000 உணவுப்பொதிகளை காசாவிற்குள் பரசூட் மூலம் வீசின என அமெரிக்காவின் மத்திய கட்டளைப்பீடம் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் பிரான்ஸ் எகிப்து ஜோர்தான் ஆகிய நாடுகள் முன்னர் காசாவின் மீது இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன எனினும் அமெரிக்கா இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்வது இதுவே முதல்தடவை.
வியாழக்கிழமை இடம்பெற்ற துன்பியல் நிகழ்வு காசாவில் காணப்படும் மிகமோசமான மனிதாபிமான நிலை காரணமாக அந்த பகுதிக்கான மனிதாபிமான உதவிகள் விநியோகத்தை தொடர்ந்து பேணவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது என பைடன் நிர்வாகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!