ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், சில நாட்கள் இடைவெளிக்கு பின் மீண்டும் தனது சமூகவலைதள பக்கத்திற்கு திரும்பிய ஸ்ருதிஹாசன், "இது ஒரு பைத்தியக்காரத்தனமான பயணம். இதில் என்னைப் பற்றியும் மக்களைப் பற்றியும் நிறைய கற்றுக்கொண்டேன் என்று கூறியிருந்தார்.
அதன்பிறகு அவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுறுசுறுப்பாக ஆக்டீவாக இருந்தாலும்,அவரது பதிவுகளில் சாந்தனுவுடன் அவரது புகைப்படங்கள் ஒன்றுகூட பதிவிடவில்லை.
மேலும் அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடரவில்லை. சில மாதங்களுக்கு முன்பு, ஓரி (ஓர்ஹான் அவத்ரமணி) ரெடிட்டில் சாந்தனுவை ஸ்ருதியின் கணவர் என்று குறிப்பிட்டார். இதனால் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக வதந்தி பரவியது.
ஆனால் இந்த தகவலை மறுத்த ஸ்ருதிஹாசன்,’’எனக்கு திருமணம் ஆகவில்லை. ஒவ்வொரு விஷயத்தையும் வெளிப்படையாகக் கூறும் நான், இதை நான் ஏன் மறைக்க வேண்டும்? என்னை பற்றி அறியாதவர்கள், தயவுசெய்து அமைதியாக இருங்கள் என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் நடித்த ஸ்ருதிஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!