உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
விசாரணையின் ஆரம்பத்தில் சாஹில் கெலோட் உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை எனவும், பின்னரே நிக்கி யாதவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தால் மித்ரோன் கிராம பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
அக்கிராமத்தைச் சேர்ந்த பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர், "சாஹிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது.
இப்பகுதியைச் சேர்ந்த சிலரும் அத்திருமணத்தில் கலந்துகொண்டனர். காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை இங்கு வந்தபோதுதான் இச்சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியவந்தது" என பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
வேறொரு பெண்ணுடன் தனக்கு திருமணமாக உள்ளதை சாஹில் நிக்கியிடம் இருந்து மறைத்ததாகவும், அது தெரியவந்தபோது நிக்கி எதிர்த்ததால் அவரை கொலை செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்ததாக பிடிஐ செய்தி முகமை கூறுகிறது.
ஏற்கனவே, கடந்த நவம்பர் மாதம் டெல்லியின் சத்தர்பூர் பகுதியில் அஃப்தாப் பூனாவாலா என்பவர், தனது காதலி ஷ்ரத்தா வால்கரைக் கொன்று பல துண்டுகளாக வெட்டி, காட்டில் வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் தலைநகர் டெல்லியில் நிகழ்ந்துள்ளது.
சரியான நேரத்தில் உதவியை நாடுங்கள் - முக்கியமான உதவி எண்கள்
உங்களின் துணை துன்புறுத்தல் செய்கிறார் என்றால் உடனடியாக காவல் துறை அல்லது மகளிர் ஆணையத்தின் உதவியை நாட வேண்டும்.
ஒரு பெண் இத்தகைய பிரச்னையில் சிக்கியிருக்கிறார் என்றால், நாடு முழுவதும் செயல்படக்கூடிய 1091 என்கிற உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம்.
தங்கள் கணவரிடமிருந்தோ அல்லது லிவ் - இன் பார்ட்னரிடமிருந்தோ வன்முறையை எதிர்கொள்ளும் பெண்கள் 181 என்ற உதவி எண்ணை அழைக்கலாம்.
நாடு முழுவதும் செயல்படக்கூடிய 7827170170 என்ற எண்ணை தேசிய மகளிர் ஆணையம் வழங்கியுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!