news@ilakkiyainfo.com

பிரிவுகள்

காதலியை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்த கடற்படை வீரர் (படங்கள், காணொளி)

11 Nov, 2015
மாத்தறை, வெவமன்துவ பிரதேசத்தில் நேற்று (10) இரவு தனது காதலியின் வீட்டினுள் நுழைந்த இராணுவ வீரர் ஒருவர், அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு, தானும் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். matara-army-shoot-himself-2தங்கல்லை கடற்படை இராணுவ முகாமைச் சேர்ந்த குமார ஜயசிங்க என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. matara-army-shoot-himself-1 தனது கடமைக்காக வைத்திருந்த துப்பாக்கியினாலேயே, இவர் இக்காரியத்தை புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 12196053_1644600792494438_7053214101613245167_n இதேவேளை, மாத்தறை பிரதேச செயலகத்தில், சிறுவர் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அதிகாரியான சமிலா (26) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார். matara-army-shoot-himself இரு வருட காலமாக இவர்கள் இருவரும் காதலர்களாக இருந்துள்ளதாகவும், பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிளவின் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடற்படை வீரனால் சுட்டுக் கொல்லப்பட்ட யுவதி இவர்தான்: காரணம் வெளியாகியது (படங்கள் இணைப்பு)
chamila prasadani (1) மாத்தறை – வெவஹமன்துவ பிரதேசத்தில் கடற்படை வீரர் ஒருவர் தமது காதலியை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். chamila prasadani (3) நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. வெவஹமன்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞனே காதலியை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள பெண்ணின் படங்கள் சில வெளியாகியுள்ளன. காதல் விவகாரமே கொலை மற்றும் தற்கொலைக்கான காரணமென தெரியவந்துள்ளது. பெண்ணின் வீட்டினுள் நுழைந்த நபர் தன்வசமிருந்த துப்பாக்கியால் பெண்ணை சரமாரியாக சுட்டுக்கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!