news@ilakkiyainfo.com

பிரிவுகள்

காதல் கணவன் திருடன் என தெரிந்ததால் 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை

24 Jan, 2025
ஆந்திர மாநிலம், கம்மத்தை சேர்ந்தவர் மவுனிகா (வயது31). இவரது பெற்றோர் சூரியா பேட்டையில் உள்ள கல்லூரியில் விரிவுரையாளர்களாக வேலை செய்து வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பட்டப்படிப்பு முடித்த மவுனிகா போட்டி தேர்வுகளில் கலந்து கொள்வதற்காக விஜயவாடாவில் உள்ள பயிற்சி மையத்திற்கு சென்று வந்தார். அப்போது நிதானபுரத்தை சேர்ந்த ஷேக் பாஜி என்பவரும் பயிற்சி வகுப்புக்கு வந்தார்.இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. மவுனிகாவை திருமணம் செய்வதற்காக ஷேக் பாஜி அவரை தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றார். இதனை அறிந்த மவுனிகாவின் பெற்றோர் ஷேக் பாஜி ஊருக்கு சென்று அவரை திருமணம் செய்யக்கூடாது என மகளிடம் அழுது புலம்பினர். ஆனால் மவுனிகாவின் மனம் இறங்கவில்லை.இதையடுத்து ஷேக் பாஜி மவுனிகாவின் பெயரை பிரேகா என மாற்றினர். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது தம்பதிக்கு மெஹத் (5), மெனுருல் (4). என 2 குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் ஷேக் பாஜி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கம்மம் போலீசார் பைக், செல்போன் திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களை செய்ததாக ஷேக் பாஜியை கைது செய்து அழைத்துச் சென்றனர். பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட கணவன் திருடனாக உள்ளதை எண்ணி மவுனிகா மனம் வருந்தினார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மவுனிகா குழந்தைகள் இருவரையும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.போலீசார் உடல்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ",

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!