'காந்தாரா சாப்டர் 1' புகழ் ருக்மிணி வசந்த்! - அசோக சக்ரா விருது பெற்ற தந்தை, பரதநாட்டியக் கலைஞர் தாய்... அதிகம் அறியப்படாத 5 சுவாரஸ்ய தகவல்கள்!
கன்னடத்தில் 'சாகரதாச்சே எல்லோ' மற்றும் இந்த ஆண்டு ரூ. 855 கோடி வசூல் சாதனை படைத்த 'காந்தாரா சாப்டர் 1' ஆகிய படங்களில் நடித்துப் பிரபலமான நடிகை ருக்மிணி வசந்த், தற்போது தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.
-
தந்தை: இவரது தந்தை கர்னல் வசந்த் வேணுகோபால், கர்நாடகாவின் முதல் அசோக சக்ரா விருதைப் பெற்றவர் (வீர மரணத்திற்குப் பின் 2007ல் வழங்கப்பட்டது).
-
தாய்: இவரது தாயார் சுபாஷினி வசந்த், திறமையான பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார்.
-
சினிமா பயணம்: 6 ஆண்டுகளாக சினிமாவில் பயணிக்கும் இவர், ஒரு படத்தில் நடிக்க ரூ. 1 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.
-
பொழுதுபோக்கு: நடிப்பு தவிர, புத்தகம் வாசிப்பது, சமைப்பது, படங்கள் வரைவது போன்ற விஷயங்கள் இவருக்கு நிம்மதி தருகின்றன.
-
உணவு: நெய், உப்பு மற்றும் ஒரு முட்டையுடன் கூடிய சூடான சாதம், இவருக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்றாகும்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!