காமசூத்ராவின் படைப்பு
வேதங்களை அடிப்படையாகக் கொண்டு காம சூத்ரா படைக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.
அன்பின் கோட்பாடுகள் பற்றிய முதல் நுலான காம சாஸ்திராவை எழுதியவராக சிவ பெருமானுடன் இருக்கும் நந்தி கருதப்படுகிறார்.
பின்னர், கி.மு. முதலாம் நூற்றாண்டு முதல் கி.மு. ஆறாம் நூற்றாண்டு வரை வாத்ஸாயன முனிவரால் எழுதப்பட்டும், பாதுகாக்கப்பட்டும் வந்திருக்கிறது.
மனித வாழ்க்கை பற்றி எடுத்துச் சொல்லும் முதல் 3 நூல்களில் ஒன்றாக காம சாஸ்திராவும் ஒன்று என்பது தான் இங்கே ஆர்வமூட்டும் செய்தியாகும்.
ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறும் தர்மா சாஸ்திரமும், பொருட்செல்வத்தைப் பற்றிக் கூறும் அர்த்த சாஸ்திரம் ஆகியவை முதல் இரண்டு நூல்களாகும்.
காமம் வாழ்க்கையின் 3-வது குறிக்கோளாக கருதப்படுகிறது. கேட்டல், உணருதல், பார்த்தல், ருசித்தல் மற்றும் முகர்தல் ஆகிய ஐந்து அறிவுகளையும் மனம் மற்றும் ஆத்மாவின் உதவியுடன் ஒருங்கிணைத்து முறையான வேறொன்றுடன் அனுபவிப்பதையே காமம் என்று சொல்லலாம். (காம சூத்ரா, 1883)
பேரின்பத்தை அடையும் வழியைச் சொல்லும் காமசூத்ரா
உடல் ரீதியாக இணையும் போது, உடல் மற்றும் உணர்வின் சந்திப்பு நடக்கும்.
எனவே, இந்த ஆசையானது புனிதமாகவும் மற்றும் கற்புடையதாகவும் இருக்கும். பல்வேறு விளையாட்டுகள் மூலம் தெய்வீக பேரின்பத்தை அடையும் வழியை நோக்கி காம சூத்ரா வழி நடத்துகிறது.
தேவைக்கான காமமாக இல்லாமல், விளையாட்டுகள் நிறைந்த காமமாக இருந்தால் அது பரவச நிலையை கொடுக்கும். அவள் அல்லது அவனுடைய பாலியல் தேவையை அடக்கி வைத்தால், அது மனிதர்களின் மன நிலையில் பிரச்னைகளை ஏற்படுத்தி, வாழ்வில் அதிருப்தியை உண்டாக்கும்.
குரு தீபக்கின் கூற்று,
"செக்ஸ், நியூரோசிஸ், டிவியன்ஸி, தவறான பாலியல் பழக்கங்கள், வன்முறை, தவறாக பயன்படுத்துதல், கண்டறியப்பட்ட எதிர்ப்புகள், அடக்கி ஆளுதல் மற்றும் ஒடுக்குதல் ஆகிய அனைத்து பிரச்சனைகளுமே செக்ஸிக்கான தூண்டுதல்கள் கிடையாது.நம்முடைய தூண்டுதல்களை, ஆசைகள் மற்றும் உணர்வுகளை புற தலையீடுகளின்றி, நாம் அறிந்து கொள்ளச் செய்தால், அவை தீவிரமான நிலைகளை அடைவதில்லை.
தீவிரவாதம், அது எந்த நிலையில் இருந்தாலும் அது ஒடுக்குமுறை, தடை மற்றும் அடக்குமுறை ஆகியவற்றின் பதிலாகவே இருக்கும். வன்முறையும், ஆக்கிரமிப்பும், பயம் மற்றும் முடியாத நிலையின் நிழல்களே" என்கிறார் தீபக் சோப்ரா என்ற குரு.
மகிழ்ச்சியின் மற்றொரு பக்கத்தை சொல்லும் காமசூத்ரா
இந்த அற்புதமான நூலிலுள்ள பாலியல் நிலைகளை நாம் இன்னமும் ஆழமாக சென்று பார்த்தால், ஒவ்வொரு நிலைக்கும் உள்ள புனிதமான சக்தியைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும்.
எனவே, நாம் நினைத்துக் கொண்டிருப்பதைப் போலல்லாமல், மிகவும் மாறுபட்ட கண்ணோட்டத்திலேயே காமசூத்ராவைப் பார்க்க வேண்டும். மகிழ்ச்சியின் மற்றொரு பக்கத்தையும், அதை அனுபவிக்கும் விதத்தையும் இங்கே நீங்கள் பார்க்க வேண்டும். இதன் வழியாக மட்டுமே நீங்கள் இறுதியான புனித நிலையை அனுபவிக்க முடியும்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!