news@ilakkiyainfo.com

பிரிவுகள்

காருக்கு பதிலாக திருமண தோணி

15 Oct, 2024
சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக குடா கங்கை பெருக்கெடுத்து , களுத்துறை வீதி மூழ்கியுள்ளமையால் புதுமண தம்பதியை தோணியில் அழைத்து வந்த சம்பவம் சத்தங்கொடை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. நிலவி வரும் சீரற்ற காலநிலையுடன், திருமண காருக்கு பதிலாக, அவர்கள் தோணியை பயன்படுத்தியுள்ளனர். இதை பார்த்த சிலர் அவர்களை கேலி செய்து வரும் நிலையில் , எந்த ஒரு சூழ்நிலையும் தாங்கும், துணிச்சல் மிக்க பொருத்தமான ஜோடி என கூறி பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் , களுத்துறை, புளத்சிங்கள, மதுராவல மற்றும் ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளின் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!