news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கார்குண்டுவெடிப்பில் ரஸ்ய இராணுவத்தின் உயர் அதிகாரி பலி - மொஸ்கோவில் சம்பவம்

25 Apr, 2025
மொஸ்கோவில் இடம்பெற்ற கார்க்குண்டுவெடிப்பில் இராணுவத்தின் உயர்அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். ரஸ்ய இராணுவத்தின் பிரதான செயற்பாட்டு அலுவலகத்தின் துணை தலைவரான யரோஸ்லாவ் மொஸ்காலிக் ரஸ்ய தலைநகரின் நெஸ்டேரோவ் பவுல்வார்ட்டில் இடம்பெற்ற கார்க்குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளார். காரி;ன் எரிவாயு சிலிண்டருக்கு அருகில் பொருத்தப்பட்டடிருந்த வெடிபொருள் தொலைவிலிருந்து இயக்கப்படும் கருவி மூலம் வெடிக்கவைக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்மாடிகளிற்கு அருகில் கார் தீப்பற்றி எரிவதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களி;ல் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலிற்கு யார் காரணம் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. உக்ரைனின் புலனாய்வு பிரிவினர் ரஸய இராணுவத்தின் உயர் அதிகாரிகளை ரஸ்யாவிற்குள் இலக்குவைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!