இரகசிய-அறையில் வைத்து இரு பெண்கள் படுகொலை!!-ஓய்வுபெற்ற-கடற்படை-அதிகாரிகள்-மூவருக்கும்-விளக்கமறியல்
20 Oct, 2026
டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம, வேவர்லி தோட்டத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் ஆண் சிசுவொன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
நேற்று காலை பிறந்த ஆண் சிசு ஒன்றையே இவ்வாறு, ஆட்லி தோட்டத்தில் வீடு ஒன்றின் பின்புறத்தில் உள்ள புற்தரையில் வீசி சென்றுள்ளதாக தெரியவருகிறது.
அதனையடுத்து, அப்பகுதி வழியாக சென்ற பிரதேசவாசிகள் சிசுவை கண்டு டயகம பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர்.
சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், பிரேத பரிசோதனைக்காக சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து, சிசுவை ஈன்றத்தாய், மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!