news@ilakkiyainfo.com

பிரிவுகள்

காஸா பலி எண்ணிக்கை 30,000 ஐ கடந்தது: பட்டினியாலும் மரணங்கள்

29 Feb, 2024
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30,000 ஐக கடந்துள்ளது. இஸ்ரேலில் ஹமாஸ் இயக்கம் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்திய தாக்குதல்களையடுத்து, பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியம் மீது இஸ்ரேலியப் படைகள் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், இத்தாக்குதல்கள் ஆரம்பித்த பின்னர் காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30,000 ஐ கடந்துள்ளது என காஸாவிலுள்ள சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. இதுவரை 30,035 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 70457 பேர் காயமடைந்துள்ளனர் என அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, காஸாவின் அல் ஷிபா நகரிலுள்ள வைத்தியசாலையில், மந்தபோஷாக்கு, நீரிழப்பு மற்றும் பட்டினி காரணமாக 6 சிறார்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் மரணங்களைத் தடுப்பதற்காக சர்வதேச ஸ்தாபனங்கள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் காஸா சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் குத்ரா கோரியுள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!