news@ilakkiyainfo.com

பிரிவுகள்

 கிணற்றில் விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகள் பலி

19 Oct, 2020
கலேவல – ரன்வெதியாவ பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் வயலுக்கு நீர் இறைப் பதற் காகத் தோண்டப்பட்டிருந்த கிணற்றில் வீழ்ந்து உயிரி ழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை காணாமல் போயிருந்த நிலையில் குறித்த மூன்று பிள்ளைகளும் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள னர். இந்நிலையில், 12 மற்றும் 15 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளும் 7 வயதான சிறுவனும் இவ்வாறு உயிரிழந் துள்ளனர். அத்துடன் பிரேதப் பரிசோதனைக்காக இவர்களின் உடல் கலேவல வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கலேவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!