news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கிளிநொச்சியில் 22 வயது இளைஞன் விபத்தில் பலி

19 Sep, 2024
கிளிநொச்சியில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சி செல்லும் வீதியின் பன்னங்கண்டி பாலத்திற்கு அருகாமையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞன் மீது வீதியால் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தை ஏற்படுத்திய வாகனம் மற்றும் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் பன்னங்கண்டி பகுதியைச்சேர்ந்த அந்தோனி அல்பிரட் - அனுஷன் எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!