news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கிளிநொச்சி-ஆனையிறவு பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் பலி

09 Aug, 2024
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனையிறவு இராணுவ சோதனை சாவடியில் வியாழக்கிழமை (09) காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனையிறவு இராணுவ சோதனைச் சாவடி சாவடியில் அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது இந்த விபத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அதாவது யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார்விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!