கிளிநொச்சி பூநகரி வாடியடி பகுதியில் இன்று (07) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரிப்பர் வாகனம் மோதியுள்ளது.
இந்த விபத்தில் 52 மற்றும் 63 வயதுடைய இருவர் படுகாயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டியில் ஏற்றப்பட்டு பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!