இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
இதன் மூலம் லூகன்ஸ் மாகாணம் முழுவதையும் கைப்பற்றி விட்டதாக ரஷியா அறிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியா, தொடக்கத்தில் தலைநகர் கீவை மட்டுமே குறி வைத்தது.
ஆனால் அதில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்காததால் கிழக்கு உக்ரைன் பக்கம் கவனத்தை திருப்பியது.
டான்பாஸ் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களை கைப்பற்றினால் கிரீமியாவுடன் இணைத்து கிழக்கு உக்ரைனை முழுமையாக கைப்பற்றி விடலாம் எனக் கணக்குப் போட்டது.
அதன்படி அந்த பகுதியில் முழு வீச்சில் தாக்குதலைத் தொடங்கியது. அதன் பலன், மரியுபோல் நகரம் வீழ்ந்தது.
அதனைத் தொடர்ந்து செவோரோடொனட்ஸ்க், லிசிசான்ஸ்க் என தொடர் வெற்றிகளைப் பெற்று, தற்போது லுஹான்ஸ்க் மண்டலத்தை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது ரஷியா. லிசிசான்ஸ்க் நகரில் இருந்த உக்ரேனிய படைகள் பின்வாங்கி விட்டதால், கிழக்கு உக்ரைன் ரஷியா வசமாகி விட்டது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!