கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நடன நாடகத்துறை பரீட்சகரை மாற்ற கோரி தொடர்ந்தும் போராட்டம்; 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி
கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடன நாடகத்துறை பரீட்சகரை மாற்றுமாறு கோரி நான்காம் ஆண்டு மாணவர்கள் இரவு பகலாக பணிப்பாளரின் காரியாலயத்தின் முன்னால் அமர்ந்து மூன்றாவது நாளாக தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது 4 பேர் வாந்தி எடுத்துள்ளனர் மற்றும் 4 பேர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கற்கை நிறுவகத்தில் நான்காம் வருடம் முதலாம் அரையாண்டில் (2019–2020) நடன நாடகத்துறையில் கல்வி கற்றுக் கொண்டுவரும் மாணவர்கள், விரிவுரையாளர் ஒழுங்கு முறையாக இரண்டு வகுப்புகளும் நடத்தவில்லை, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி சில மாணவர்களின் உடலமைப்பை வைத்து அவமானப்படுத்தியுள்ளார். மேலும், விரிவுரை நேரங்களில் மாணவர்களை எந்த காரணமுமின்றி வெளியேற்றி விடும் நடவடிக்கையால் மாணவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் அதற்காக கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பாரதி கெனடியிடம் 04.03.2025 அன்று எழுத்து மூலம் கடிதம் வழங்கி பரீட்சகரை மாற்றுமாறு கோரியுள்ளனர். பணிப்பாளர் இரு வாரங்களில் தீர்வு தருவதாக உறுதியளித்தாலும், கோரிக்கை நிறைவேறவில்லை. 12.08.2025 அன்று மீண்டும் கடிதம் மற்றும் நேரடி முறையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தீர்வு கிடைக்காமையால் மாணவர் ஒன்றியத்தின் ஊடாகவும் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும், எந்த நியாயமான தீர்வும் வழங்கப்படவில்லை. இதனால், குறித்த பாடத்துக்கான பரீட்சகரை நியமிக்க வேண்டாம் என கோரி கடந்த புதன்கிழமை (07ம் திகதி) முதல் 67 மாணவர்கள் காரியாலயத்தின் முன்னால் அமைதியான போராட்டத்தை தொடங்கி, இரவு பகல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது 4 பேர் மயக்கமடைந்த நிலையில் மற்றும் 5 பேர் வாந்தி எடுத்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் கொட்டும் மழை மற்றும் குளிர்காற்றுக்கு மத்தியில் காரியாலய கட்டிட வெளிபகுதியில் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!