இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?
27 Oct, 2026
கிடப்பில் இருந்த கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்த அநுர அரசின் அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியுள்ள நிலையில் அது தமிழ் மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.......
கிவுல் ஓயா வவுனியா மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உற் பத்தியாகும் ஒரு பருவகால ஆறு. மா ஓயாவின் கிளை ஆறுகளில் ஒன்று. அதனை மறித்து வெலி ஓயாவை (மணலாறு) அண்டியபகுதி யில் ஒரு பாரிய அணைத் தேக்கம் கட்டப்படவுள்ளது. அதுவே முன்மொழியப்பட்ட கிவுல்ஓயா நீர்த்தேக்கம்.
1950 களில் கட்டப்பட்ட பதவியா திட்டத்திற்கு அடுத்ததாக, மகாவலி எல் வலயத்தில் அமைக்கப்படும் இரண்டாவது மிகப்பெரிய பிரதான நீர்த்தேக்கமாக இது இருக்கும்.
இந்த திட்டத்தின் கீழ், கிவுல் ஓயா ஆற்றைமறித்து சுமார் 4.41கிலோ மீற்றர் நீளம் கொண்ட ஒரு பாரிய அணை மற்றும் 12.9 கிலோ மீற்றர் நீளமுள்ள பிரதான கால்வாய் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது.
கிவுல் ஓயா திட்டத்தின் நீரேந்து பகுதியாகி பாதிக்கப்படும் வவுனியா வடக்கு பிரதேசத்தின் தமிழ் கிராமங்களுக்கு இத்திட்டத்தால் எந்தவிதமான பயனும் இல்லை.
மாறாக, வெலிஓயா வலது கரை யில் அமைந்துள்ள 1,700 ஹெக் டேர் புதிய விவசாய நிலங்கள் உட்பட நிகவெவ, எஹடுகஸ்வெவ, கிறி இப்பன்வெவ, ஹெலெம்பே வெவ ஆகிய சிங்கள குடியேற்றப் பகுதிகளில் உள்ள நெல் வயல்கள் என மொத்தமாக 2400 ஹெக் டேர் நிலங்களுக்கு கூடுதல் பாசன நீர் வழங்கப்படும்.
இதனை இரு போகமும் வழங்குவதே இலக்கு. அத்துடன் 1700 (4200 ஏக்கர்) நிலங்களில் புதிய குடியிருப்பாளர்கள் குடியேற்றப் படுவர் இதுவே திட்டத்தின் பிரதான நோக்கம்.
இவ் நீரானது கொண்டு செல்லப்படும் இடங்கள் ஏற்கனவே செறிவாக சிங்களக் குடியெற்றங்கள் இடம்பெற்ற தமிழர் பகுதிகள். தற்போது 1700 ஹெக்டேர் அளவில் குடியேற்றப்போவது யாரை? என்ற கேள்வியே இப் போது பெரும் பிரச்சினை.
எல்வலயம் என்ற போர்வையில் ஏற்கனவே தமிழர் நிலங்கள் சூறையாடப்பட்டு சிங்கள குடி யேற்றங்கள் இடம்பெற்ற நிலை யில் மீண்டும் கிவுல் ஓயா என்ற பெயரில் சிங்கள குடியெற்றங்கள் தமிழர் நிலத்தை ஆக்கிரமிப்பது தமிழ் மக்களின் இனப் பரம்பலை அல்லது வவுனி யா, முல்லைதீவு மாவடத்தின் தமிழ் மக்களின் பெரும்பான்மையை கேள்விக்குட்படுத்தும் நோக்கம் கொண்டதாகவே நோக்க முடிகின்றது.
இதேவேளை இவ், முன்மொழியப்பட்ட நீர்த் தேக்கத்தால் நீரில் மூழ்கும் பகுதி உட்பட, சுமார் 2,500 ஹெக்டேர் (6177 ஏக்கர்) இயற்கை வாழிடங்கள் இழக் கும் அபாயம் உள்ளமையை திட்ட மதிப்பீட்டு அறிக்கை யில் வெளிப்படுத்துகின்றது.
அத்தோடு வடக்கின் தமிழ் மக்களது பூர்வீக கிராமங்களான மருதோடை, வெடிவைத்தகல்,
காட்டுப்பூவசரங்குளம், காஞ்சூரமோட்டை, கூழாங்குளம் போன்ற தமிழர் கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் நிலை காணப்படுகின்றது.
தமிழ் மக்கள் மத்தியில் அச்ச உணர்வை தோற்றுவித் துள்ள கிவுல் ஓயாத் திட்டத்தை எப்படி செய்யப் போகின்றது என்பது குறித்து இத்திட்டம் நடை முறைப்படுத்தவுள்ள பூர்வீக மக்களோடோ அல்லது தமிழ் அரசியல் தலைமகளோடோ எந்த விதமான வெளிப்படையான கலந்துரையாடல்களும் நடத்தாது அரசும் முனைப் புக்காட்டுவது தமிழர்கள் மத்தியில் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
இந்தத் திட்டம் முன்னெ டுக்கப்படுவதால், வடக்கின் எல்லையில் குடிப்பரம்பல் மாற்றிய மைக்கப்படும் அபாயம் காணப்படும் அதே வேளை தொல்பொருளி யல் பகுதிகள் காணாமல் போகும் அபாயங்கள் உள்ள நிலையில் இத்திட்டத்தின் ஆபத்து குறித்து தமிழ் தலைமைகள் பேச ஆரம்பித் திருப்பதும் எதிர்ப்பை வெளியிட ஆரம்பித்திருப்பதும் தமிழ் மக்கள் மத்தியில் நிம்மதியாக இருப்பினும் மகாவலி போன்று இத்திட்டத் திலும் தமிழ் தலைமைகள் மெத் தனப்போக்காக இருந்து விடுவார் களா? என்ற அச்சம் இருக்கத்தான் செய்கின்றது.
நெடுந்தீவு ஜெயபாலன்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!