news@ilakkiyainfo.com

பிரிவுகள்

குடும்பஸ்தர் அடித்துக்கொலை

24 Sep, 2020
மட்டக்களப்பு - முனைக்காடு, தெற்கு வீட்டுத்திட்டப் பகுதியில், 5 பிள்ளைகளின் தந்தையான இரட்ணசிங்கம் உதயன் (35 வயது) எனும் குடும்பஸ்தர், நேற்று (23) இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என, கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்தை, இன்று (24) காலை பார்வையிட்ட நீதிபதி எம்.றிஸ்வான், சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லுமாறு பணித்தார். அத்தோடு, சம்பவ இடத்துக்கு வருகைவந்த மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவு பொலிஸாரும் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லையெனத் தெரிவித்த கொக்கட்டிச்சோலை பொலிஸார், சம்பவம் தொடர்பிலான தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருவதாகத் தெரிவித்தனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!