news@ilakkiyainfo.com

பிரிவுகள்

குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வில் பதற்ற நிலை : பிக்குவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு !

19 Aug, 2023
தமிழர் தரப்பினரால் நேற்றையதினம் குருந்தூர் மலையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் நிகழ்வுக்கு இடையூறு விளைவித்த பௌத்த பிக்குவுக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.’ பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வழிபாட்டின் போது குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்திற்குள் அத்து மீறி நுழைந்து, வன்முறையில் ஈடுபட்ட தேரருக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு குறித்த முறைப்பாட்டில், கூறப்பட்டுள்ளது. இதேவேளை மத வழிபாட்டு சுதந்திரத்தை மறுத்து பொங்கல் வழிபாட்டினை தடுத்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கையெடுக்குமாறு குறித்த முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!