இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?
27 Oct, 2026
ஆனால் அப்போதைய திணைக்கள கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய, உயர்நீதிமன்ற உத்தரவை துச்சமென மதித்து செயற்பட்டார்.
அதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக அவர் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். அதன் பிறகே இவர் பல குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல உதவியவர் என்ற விவகாரம் அம்பலமானது.
அதையடுத்து அநுர குமார அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டவர் உயர் நீதிமன்றினால் கடமைகளை முன்னெடுக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன். பல குற்றச் சம்பவங்களின் பின்னணியாக செயற்பட்ட இவர்
கடந்த 2023 டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை, வெலிகமவில் பகுதியில் பெலேன துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்காக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
குறித்த பகுதியில் உள்ள W15 ஹோட்டலுக்கு முன்னால் வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகளால், கொழும்பு குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் குழு மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மரணமடைந்திருந்தார்.
அச்சந்தர்ப்பத்தில் தேசபந்து தென்னக்கோன் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்டார். இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டதாகவே இருந்தன. எனினும் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானவுடன் உடனடியாக இந்த விவகாரத்தை தூசு தட்டினார்.
இவ்வருடம் பெப்ரவரி மாதம் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக மாத்தறை நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
அதற்கமைய, கொழும்பு குற்றப் பிரிவின் (CCD) முன்னாள் அதிகாரிகள் மற்றும் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட எட்டு பொலிஸ் அதிகாரிகளை சந்தேக நபர்களாகக் குறிப்பிட்டு, மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு நபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அறிவுறுத்தப்பட்டது.
இருப்பினும், பல நாட்களாக கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்த முன்னாள் பொலிஸ் மாஅதிபரை கண்டுபிடிக்க CID குழுக்களால் முடியவில்லை.
அவரை முன்னாள் அரசியல்வாதிகள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்திருந்தனர். இதனிடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவை நிறைவேற்றுவதைத் தடுக்க இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தேசபந்து தென்னக்கோன் தாக்கல் செய்த ரிட் மனுவை மார்ச் 17 அன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதைத் தொடர்ந்து மேல்முறையீட்டு நீதிமன்றம் தென்னக்கோனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டது. பலருக்கு கண்ணாமூச்சு விளையாட்டு காட்டி விட்டு அவரே நீதிமன்றில் முன்னிலையாகிய போது இவ்வருடம் மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
ஆனால் அவர் இருக்கும் இடம் தெரிந்தும் கூட குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் அவரைத் தேடிப்பிடிப்பதில் அக்கறையின்றியே செயற்பட்டதாக கூறப்பட்டது.
மேலும் பல பாதாள உலக கோஷ்டியினருடன் தேசபந்து தென்னக்கோன் தொடர்பை பேணி வந்தமை அம்பலமானது. அவர் பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட போது யுக்திய நடவடிக்கைளின் போது சிறு சிறு குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்களையே கைது செய்வதில் அவர் அக்கறை காட்டியிருந்தார்.
இதே வேளை குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்த சம்பவமாக சிறைச்சாலை ஆணையாளர்
நாயகம் துஷார உப்புல்தெனிய நாயகத்தின் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. . ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பொது மன்னிப்பு கைதிகளை தவிர்த்து மேலதிகமாக சிலரை பட்டியலில் சேர்த்து அவர்களும் விடுதலை செய்யப்பட இவர் காரணமாக இருந்திருக்கின்றார் என்பது குற்றச்சாட்டு.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!