வங்கக்கடலில் உருவாகும் புயல்: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை?
25 Oct, 2026
சென்னை கலாக்ஷேத்ரா
வருவாய்க் கோட்ட அலுவலர், வட்டாட்சியர், காவல் இணை ஆணையர், துணை ஆணையர் ஆகியோர் அங்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த காலக்ஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரனை மாணவிகளும் பத்திரிகையாளர்களும் சூழ்ந்துகொண்டபோது, "மாணவிகளின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். அவர்கள் சொல்லும் புகார் குறித்து எல்லோரிடமும் கலந்தாலோசித்து விசாரிப்போம்," என்றார்.
ஆனால், "இரண்டரை மாதங்களுக்கும் மேல் விசாரித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" எனக் கேட்டபோது, அவர் பதிலளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டார்.
வியாழக்கிழமை நள்ளிரவில் அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மாணவிகள் புகார்கள் எதையும் தங்களிடம் பதிவு செய்யவில்லை என்றும் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
பிறகு, போராட்டத்தை நாளை காலை தொடரப் போவதாகக் கூறிவிட்டு அதிகாலை இரண்டு மணிவாக்கில் மாணவிகள் தங்கள் அறைகளுக்குத் திரும்பினர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதற்கிடையில் இந்த விவகாரம் தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இன்று எதிரொலித்தது. எஸ்.எஸ். பாலாஜி, தி. வேல்முருகன், கு. செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இதுகுறித்துக் கேள்வியெழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "இந்த விவகாரத்தில் காவல்துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.
கலாக்ஷேத்ரா மாணவர்கள் பாலியல் குற்றச்சாட்டு
இந்த நிலையில், மாணவிகள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தின் விளைவாக, கலாஷேத்திரா ஃபவுன்டேஷனில் உள்ள கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, விடுதிகளைவிட்டு மாணவிகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள்.
அங்குள்ள மாணவிகளின் பாதுகாப்பிற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, அங்கு ஒரு பெண் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
அரசைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்று கூறினார்.
இதற்கிடையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா , "கலாஷேத்ரா கல்லூரியில் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் தொல்லை தொடர்பாக இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் எதுவும் வரவில்லை. புகார் அளிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்" என்று கூறினார்.
தமிழக பெண்கள் ஆணையத்தின் தலைவி ஏஎஸ். குமாரி கலாக்ஷேத்ராவுக்கு வந்து மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அதற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய அவர், "இந்த விவகாரம் குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்போவதாக" கூறினார்.
கலாக்ஷேத்ரா மாணவர்கள் பாலியல் குற்றச்சாட்டு
மாணவிகளைப் பொறுத்தவரை பாலியல் தொந்தரவு அளித்ததாக நான்கு பேரின் பெயர்களைச் சொல்கின்றனர்.
2008ஆம் ஆண்டிலிருந்தே இதுபோன்ற பாலியல் தொந்தரவு இருப்பதாகக் கூறியும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள் மாணவர்கள்.
வியாழக்கிழமை இரவில் அங்கு சில மாணவர்களின் பெற்றோர் வந்திருந்தனர். அவர்களிடம் பேசியபோது, அங்கு நிலவும் ரகசியத்தன்மை குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.
"எங்கள் குழந்தைகளை இங்கே சேர்த்துவிடும்போது உள்ளே சென்றதுதான். அதற்குப் பிறகு நாங்கள் உள்ளே செல்ல முடியாது. படிப்பின் நிறைவில் ஒரு கலை நிகழ்ச்சி நடக்கும். அப்போது ஆடிட்டோரியத்திற்குச் செல்லலாம்.
மற்றபடி எங்கேயும் செல்ல முடியாது, எதுவும் கேட்க முடியாது. பிள்ளைகளின் படிப்பு பாழாகிவிடும் என்பதால் பேசாமல் இருக்க வேண்டியிருக்கிறது," என்று கூறினார் கேரளாவில் இருந்து வந்திருந்த பெற்றோர் ஒருவர்.
1936ஆம் ஆண்டில் ருக்மிணி தேவி அருண்டேல் மற்றும் ஜார்ஜ் அருண்டேல் ஆகியோரால் அடையாறில் உள்ள பிரம்மஞான சபையின் தோட்டத்தில் துவங்கப்பட்டது கலாக்ஷேத்ரா. 1962இல் இருந்து தற்போது திருவான்மியூரில் உள்ள இடத்திற்கு மாறியது. 1993இல் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின்படி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!