கசிப்பு விற்ற தபால் ஊழியர்: 3 ஆண்டுகளாகக் கடிதங்களை விநியோகிக்கவில்லை
21 Oct, 2026
கடந்த ஜுலை மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் ஏற்க மறுத்ததும், சச்சின் பைலட் போன்றவர்கள் தலைவர் பதவி ஏற்கலாம் என்ற குஷ்பு கருத்து மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக காங்கிரஸ் கட்சியினர் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர், காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வரும் புதிய கல்விக் கொள்கைக்கு அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு ஆதரவாக கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி குஷ்புவுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மறைந்த முன்னாள் எம்பி வசந்தகுமார் படத்திறப்பு விழாவை, டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என கூறி தனது வருத்தத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார் குஷ்பு.
தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவமனையில் இருக்கும்போது நலம் பெற வாழ்த்து தெரிவித்தார்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டபோது அவருக்கும் வாழ்த்து கூறினார். இதனால் சமீப காலமாக குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், இந்தத் தகவலை அண்மையில் காங்கிரஸ் கட்சி போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் மறுத்திருந்தார்.
அத்துடன், தான் காங்கிரஸிலிருந்து விலகுவதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது எனவும் கூறியிருந்தார்.
ஆனால், கடந்த 2 நாட்களுக்கு முன், நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பதிவில், பலர் என்னிடம் ஒரு மாற்றத்தைப் பார்க்கின்றனர்; மாற்றம் தவிர்க்க முடியாதது என பதிவிட்டார்.
இந்நிலையில், நேற்று டெல்லி செல்லும் முன் பாஜகவில் இணைவது பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, கருத்து சொல்ல விரும்பவில்லை என்று மட்டும் கூறினார். டெல்லி புறப்பட்டுச் சென்ற குஷ்பு இன்றுதான் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி தலைமையும் அவரை கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, தற்போது அவர் பாஜகவில் தன்னை அதிகாரப் பூர்வமாக இணைத்துக்கொண்டார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!