news@ilakkiyainfo.com

பிரிவுகள்

‘கூடுதலாக 10% வரி’: பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் புதிய எச்சரிக்கை

07 Jul, 2025
பிரிக்ஸ் அமைப்பின் “அமெரிக்காவுக்கு எதிரான கொள்கைகளுடன்” இணங்கும் நாடுகள் மீது 10% கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படும் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். “பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் அமெரிக்காவுக்கு எதிரான கொள்கைகளுடன் இணங்கிப்போகும் நாடுகள் மீது கூடுதலாக 10% இறக்குமதி வரி விதிக்கப்படும். எந்த நாட்டுக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படாது,” என தன்னுடைய சமூக வலைதளமான ட்ரூத் சோஷியலில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். எனினும், அமெரிக்காவுக்கு எதிரான கொள்கைகள் என்ன என்பது குறித்து டிரம்ப் தன் பதிவில் தெளிவாக குறிப்பிடவில்லை. கடந்த 2009ம் ஆண்டு பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவை உள்ளடக்கிய குழுவாக பிரிக்ஸ் உருவானது. அதன்பின், தென் ஆப்ரிக்கா இந்த குழுவில் இணைந்தது. 2004ம் ஆண்டில் எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனீசியா, இரான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அதன் உறுப்பினர் நாடுகளாக இணைந்தன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!