news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை!

02 Sep, 2020
ரொட்டும்ப பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வதுராதெனிய பகுதியில் நேற்று இரவு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கத்தை தொடர்ந்து நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார். காயமடைந்த  நபர் ஹீகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. பஸ்கொட பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அத்தோடு கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!